வாயு புயல் அதிதீவிர புயலாக மாறி நாளை காலை குஜராத் மாநிலம் போர்பந்தர் - டையூ பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும்: இந்திய வானிலை மையம்

டெல்லி: வாயு புயல் அதிதீவிர புயலாக மாறி நாளை காலை குஜராத் மாநிலம் போர்பந்தர் - டையூ பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 145 கி.மீ முதல் 170 கி.மீ வரை இருக்கக் கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிதீவிர புயலாக உருப்பெற்று வாயு புயல் கரையை நோக்கி நகர்கிறது என கூறப்படுகிறது. நாளை கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 175 கி.மீ. இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


× RELATED பெரும் பாதிப்பில் இருந்து தப்பியது...