×

வனப்பகுதியில் சிறுத்தை சடலம்

மஞ்சூர்: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள தாய்சோலா கோவிலட்டி வனப்பகுதியில் வழக்கம்போல் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது புதர் பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதை கண்டு அருகில் சென்று  பார்த்தனர். அப்போது புதருக்குள் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதை தொடர்ந்து மாவட்ட வனஅலுவலர் குருசாமிதபேலா, உதவி வனப்பாதுகாவலர் சரவணகுமார், குந்தா ரேஞ்சர் சரவணன், வனவர் ரவிக்குமார், ஸ்ரீராம், வனக்காப்பாளர்  பன்னீகுமார், ராமச்சந்திரன் மற்றும் இயற்கை ஆர்வலர் மகாமகாபெள்ளியப்பன் உள்ளிட்டோர் விரைந்து சென்று சிறுத்தையின் உடலை மீட்டனர். தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் சிவசங்கரன், மனோகரன் ஆகியோர் தலைமையில் மருத்துவ  குழுவினர் சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனை நடத்தினர். சுமார் 10 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தையான இது நோய்வாய்ப்பட்டு இறந்திருக்க கூடும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags : forest , Forest, leopard
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...