×

கூடுதல் டவுன் பஸ்களை உடனே இயக்க வேண்டும்... ஆண்டிபட்டி மக்கள் கோரிக்கை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கூடுதலாக அரசு டவுன் பஸ்களை இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் கிராமங்கள் நிறைந்த பகுதியாகும். இப்பகுதியில் புள்ளிமான் கோம்பை, திம்மரசநாயக்கனூர், ஏத்தக்கோவில், வரதராஜபுரம், பாலக்கோம்பை, ஜி.உசிலம்பட்டி, குன்னூர், கோவில்பட்டி உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏராளமான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். மேலும் பொதுமக்கள் ஏராளமானோர் அலுவல் காரணமாகவும், சொந்த வேலையாகவும் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று வருகின்றனர்.

ஆனால் மேற்கண்ட பகுதிகளில் போதிய டவுன் பஸ்கள் இயக்கப்படவில்லை. குறைந்தளவில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் முண்டியத்து ஏறுகின்றனர். கூட்ட நெரிசல் காரணமாக ஏராளமானோர் ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்களில் அதிகளவில் பயணக்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. அவ்வப்போது உயிர் பலிகளும் நடக்கின்றன. எனவே மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதிகளில் கூடுதலாக அரசு டவுன் பஸ்களை இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Andipati , Andipatti, bus
× RELATED ஆண்டிபட்டி அருகே சுடுகாடு இடத்தில்...