×

திருவண்ணாமலையில் போதிய மழை இல்லாததால் கிரிவலப்பாதையில் தண்ணீரின்றி வறண்ட குளங்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் போதிய மழை இல்லாததால் கிரிவலப்பாதையில் உள்ள குளங்களில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலுக்கு ஒவ்வொரு மாத பவுர்ணமி நாளன்றும், தீபத்திருவிழா, சித்ரா பவுர்ணமி போன்ற விஷேச நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். விழாக்காலங்கள் மட்டுமின்றி சாதாரனமான நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள்.

இத்தகைய பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 100க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கிரிவலம் வரும் பக்தர்கள், குளத்தில் உள்ள தண்ணீரை புனித நீராக கருதி தலைமீது தெளித்து கொண்டு செல்வது வழக்கும். மேலும் இந்த குளங்கள் மலை பகுதியிலும், வனப்பகுதியிலும் உள்ள வன விலங்குகளுக்கு குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது. ஆனால், தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் போதிய மழை இல்லாமல் வறட்சி நிலை நிலவி வருவதால் நீர் நிலைகள் வறண்டு உள்ளது. அதேபோன்று திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள குளங்களில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால், வனப்பகுதியில் உள்ள வன விலங்குகள் குடிநீர் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : Tiruvannamalai , Thiruvannamalai, Kirivala Path, Ponds
× RELATED சித்ரா பவுர்ணமியையொட்டி பக்தர்களின்...