×

உற்பத்தியாளர்கள் தங்கள் இடங்களில் சேகரமாகும் திடக்கழிவுகளை தாங்களே வகை பிரித்து கையாள வேண்டும்: நீதிபதி ஜோதிமணி அறிவுரை

சென்னை: திடக்கழிவு உற்பத்தியாளர்கள் தங்கள் இடங்களில் சேகரமாகும் திடக்கழிவுகளை தாங்களே வகை பிரித்து கையாள வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாய மாநில கண்காணிப்பு குழு தலைவர் நீதிபதி ஜோதிமணி தெரிவித்துள்ளார். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்த திடக்கழிவு உற்பத்தியாளர்களால் சேகரமாகும் கழிவுகளை கையாள்வது குறித்த கருத்தரங்கம் மற்றும் ஆலோசனை கூட்டம் தேசிய பசுமை தீர்ப்பாய மாநில கண்காணிப்பு குழு தலைவர் நீதிபதி ஜோதிமணி தலைமையில் மாநகராட்சி ரிப்பன் மாளிககையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் முன்னிலை வகித்தார்.

இதில், திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016ன்படி நாளொன்றுக்கு 100 கிலோ குப்பை உற்பத்தி செய்வோர் அல்லது 5000 ச.மீ பரப்பளவு கொண்ட வளாகத்தின் உரிமையாளர்களான உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்பு வளாகங்கள் போன்ற மொத்த திடக்கழிவு உற்பத்தியாளர்கள் தங்களின் இடங்களில் சேகரமாகும் திடக்கழிவுகளிலிருந்து மக்கும் குப்பையை வகை பிரித்து தாங்களே கையாள வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாய மாநில கண்காணிப்பு குழு தலைவர் நீதிபதி ஜோதிமணி அறிவுறுத்தினார்.

மேலும், மொத்த திடக்கழிவு உற்பத்தியாளர்களிடம் குப்பை கையாள போதிய இடவசதி இல்லையெனில், அவர்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள சென்னை மாநகராட்சியின் உரக்கிடங்கு கூடங்களில் கொண்டு சேர்க்கலாம் எனவும், மொத்த திடக்கழிவு உற்பத்தியாளர்கள் மக்கும் குப்பையை கையாளும்போது அவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளை களைவது குறித்தும், மக்கும் குப்பையை பல்வேறு விதங்களில் கையாளும் தனியார் நிறுவனங்களிடமிருந்து அவர்களின் வழிமுறைகளை பெற்று அவைகளை கூர்ந்தாய்வு செய்து அவற்றில் சிறந்த வழிமுறையை உணவகங்களின் உரிமையாளர்களுக்கு தெரிவிக்கவும் உரிய நடவடிக்கைகள் மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மக்கும் குப்பயை பல்வேறு விதங்களில் கையாளும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்கள் மக்கும் குப்பையை கையாளுகின்ற முறைகள் குறித்தும், போதிய இடவசதி இல்லாத உணவகங்கள் தங்கள் மக்கும் குப்பையை கையாளும் முறைகள் குறித்தும், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள் தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் குடியிருப்பு சங்க பிரதிநிதிகளுக்கு விளக்கி கூறினர். இந்த கூட்டத்தில் துணை ஆணையர் (சுகாதாரம்) மதுசுதன் ரெட்டி, நகராட்சி நிர்வாக இணை ஆணையர் கலைசெல்வி மோகன், தலைமை பொறியாளர் (திடக்கழிவு மேலாண்மை துறை) மகேசன், மேற்பார்வை பொறியாளர்கள், மண்டல அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு ஓட்டல்கள் உரிமையாளர் சங்கம், தங்கும் விடுதிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : manufacturers ,Judge ,places , Manufacturers, miscarriages, themselves, sort of divide, handle, judge, jodiimani
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...