×

அமெரிக்கா தடையை மீறி கச்சா எண்ணெய் ரகசிய விற்பனை ஈரான் திடீர் முடிவு

தெஹ்ரான்: அமெரிக்கா தடையை மீறி கச்சா எண்ணெய் ரகசியமாக விற்பனை செய்யப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்தது. இந்த தடை கடந்த நவம்பரில் அமலுக்கு வந்தது. ஆனாலும், இந்தியா, சீனா உட்பட 8 நாடுகளுக்கு நிபந்தனை அடிப்படையில் ஈரானில் இருந்து இறக்குமதி செய்ய 6 மாதம் சலுகை அளித்தது. இந்த சலுகை கடந்த 2ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. அமெரிக்கா விதித்த தடை ஈரானின் பொருளாதாரம் ஆட்டம் காண துவங்கியுள்ளது. இந்நிலையில், ரகசியமாக கச்சா எண்ணெய் விற்க துவங்கியுள்ளது.  இதுகுறித்து ஈரான் அமைச்சர் பிஜான் நம்தார் ஜான்கனே கூறுகையில், ‘‘ஈரானில் இருந்து அதிகாரப்பூர்வமாக அல்லாமல் ரகசியமாக கச்சா எண்ணெயை விற்பனை செய்கிறோம். வெளிப்படையாக தெரிந்தால், வாங்குபவர்களை அமெரிக்கா தடுத்து விடும். எனவே எந்த நாடுகள் வாங்குகின்றன என்ற விவரத்தை வெளியிட முடியாது. அமெரிக்கா தடையை நீக்கும் வரை இந்த ரகசிய விற்பனை தொடரும்’’ என்றார்.

Tags : Iran ,US , US, crude oil, secret sales, Iran
× RELATED இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய...