×

நியாய விலை கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: அமைச்சரை சந்திக்க முடிவு

சென்னை: தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக்கடை அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் தொ.மு.ச பொதுச்செயலாளர் மு.சண்முகம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொ.மு.ச. பேரவைச் செயலாளர் பொன்னுராம், பத்மநாபன், ராஜேந்திரன், சி.ஐ.டி.யு. சார்பில் கிருஷ்ணமூர்த்தி, ஜீவானந்தம், அசோகன், ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் முத்தையா, ஆதிமூலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக 2018ல் மண்டல மாநாடுகள், ஆர்ப்பாட்டங்கள் என தொடர் இயக்கங்கள் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்றது. இதைதொடர்ந்து ஊதியம் தொடர்பாக சீரமைப்புக் குழு அமைக்கப்பட்டது.ஆனால் ஊதியம் உயரவில்லை.ஊதிய உயர்வு தொடர்பாக கூட்டுறவுத் துறை அமைச்சர், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆகியோரை சந்தித்து வலியுறுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

Tags : price shoppers ,Minister , Ration Shop
× RELATED ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர்,...