×

ரூ.30 ஆயிரம் கடனுக்கு 3 லட்சம் கேட்டு மிரட்டல்: அதிகளவு மாத்திரை சாப்பிட்டு திருநங்கை தற்கொலை முயற்சி

சென்னை: சென்னை மேற்கு ஜாபர்கான்பேட்டை திருநகர் பகுதியை சேர்ந்தவர் அப்ஷரா (28). திருநங்கையான இவர், அஜிதா என்ற மற்றொரு திருநங்கையுடன் வசித்து வருகிறார். 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர் அறுவை சிகிச்சைக்காக அஜிதாவிடம் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் வாங்கிய கடனுக்கு ரூ.60 ஆயிரம் சிறுக சிறுக கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், அஜிதா ரூ.30 ஆயிரம் பணத்திற்கு வட்டியும் முதலுமாக ரூ.3 லட்சம் வரை கொடுக்க வேண்டும் என்று அப்ஷராவை மிரட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்ஷரா நேற்று முன்தினம் இரவு அறையில் வைத்திருந்த மாத்திரைகளை அதிகளவில் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அப்ஷராவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.அப்ஷரா அளித்த புகாரின்படி எம்ஜிஆர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

துரைப்பாக்கம்: துரைப்பாக்கம், கண்ணகி நகரை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகன் புஷ்பராஜ் என்ற புஷ்பா (28). திருநங்கை. நேற்று முன்தினம் இரவு போதையில் வீட்டிற்கு வந்த புஷ்பா, தனது அறையில் சென்று கதவை மூடிக்கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் புஷ்பா வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த அவரது பெற்றோர் கதவை திறக்க முயன்றனர். ஆனால், முடியாததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறியில் புஷ்பா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : borrowers , Suicide attempt
× RELATED வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டு 51...