×

அமெரிக்காவில் உள்ள 80 பணக்கார பெண்கள் பட்டியலில் 3 இந்தியர்

நியூயார்க்: அமெரிக்காவில் சுயமாக உழைத்து பணக்காரர்களாக உருவான 80 பெண்கள் பட்டியலில், 3 இந்திய வம்சாவளி பெண்கள் இடம் பிடித்துள்ளனர். அமெரிக்காவில் சுயமாக உழைத்து மிகப்பெரிய பணக்காரர்களாக உயர்ந்த 80 பெண்களின் பட்டியலை பிரபலமான போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இவர்கள் 21 முதல் 92 வயது வரை உள்ளவர்கள். இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருப்பவர் ஏபிசி நிறுவனத்தின் தலைவர் டையனே ஹென்டிரிக்ஸ் (72). அமெரிக்காவில் கூரைகள், ஜன்னல்கள் தயாரித்து விநியோகம் செய்யும் அமைப்பான ஏபிசி-ன் தலைவரான இவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.48,630 கோடி.

இந்த பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 பெண்கள் இடம் பிடித்துள்ளனர். அவர்களில் 18வது இடத்தை பிடித்திருப்பவர் ஜெய்ஸ்ரீ உல்லால் (58). லண்டனில் பிறந்து இந்தியாவில் வளர்ந்த இவரது சொத்து மதிப்பு ரூ.9,726 கோடி. இவர் அரிஸ்டா நெட்வொர்க் என்ற கம்ப்யூட்டர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிஇஓ ஆக உள்ளார். இதற்கு அடுத்து 23வது இடத்தை பிடித்திருப்பவர் நீரஜா சேதி. ஜிண்டால் ஐடி கன்சல்டிங் நிறுவனத்தின் இணை நிறுவனரான இவருடைய சொத்து மதிப்பு ரூ.6,947 கோடி. இதற்கு அடுத்ததாக 60வது இடத்தை பிடித்திருப்பவர் நேஹா நர்கடே (34). கன்புளுயன்ட் என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை நிறுவனரான இவரது சொத்து மதிப்பு ரூ.2.502 கோடி. இந்த பட்டியில் பேஷன் டிசைனர் டோரி பர்ச் 29வது இடத்தையும், பாப் ஸ்டார் ரிஹானா 37வது இடத்தையும் பிடித்துள்ளனர். டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் 80வது இடத்தையும் பிடித்துள்ளார்.

Tags : Indians ,women ,US , United States
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...