×

கேரளாவுக்கு அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய தமிழக விரைவு போக்குவரத்து கழக டிரைவர் கைது

திருவனந்தபுரம்: தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு அரசு பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த தமிழக அரசு பஸ் டிரைவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்திற்கு வரும் கஞ்சாவை தடுப்பதற்காக போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் இருந்து வரும் அரசு பஸ் டிரைவர்களை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். நேற்று முன்தினம் ஊட்டியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் வந்தது.

இந்த பஸ்சில் கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக திருவனந்தபுரம் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பஸ்சை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். நேற்று முன்தினம் காலை அந்த பஸ் திருவனந்தபுரம் பஸ் நிலையத்தை அடைந்தது. பயணிகள் இறக்கியதும் கிள்ளிபாலம் பகுதியில் உள்ள டெப்போவுக்கு சென்றது. போலீசார் ரகசியமாக அந்த பஸ்சை பின் தொடர்ந்தனர். அப்போது டெப்போவில் பஸ்சை நிறுத்திவிட்டு டிரைவர் இறங்கினார். அவரது கையில் ஒரு பொட்டலம் இருந்தது. உடனடியாக போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். தொடர்ந்து அவரை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் 5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், நெல்லை மாவட்டம் திருவேங்கடத்தை சேர்ந்த ஜெயராஜ் (45) என்பது தெரியவந்தது. இதேபோல் பலமுறை தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தி வந்ததை அவர் ஒப்புக் கொண்டார். கண்டக்டர்கள் பொருட்களை போலீசார் சோதனை செய்வது இல்லை என்பதால், அவர் இதை எளிதாக செய்து வந்துள்ளார்.

Tags : cancellation ,Tamilnadu Quick Transport Corporation Driver ,Kerala , Arrested
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...