×

24 மணி நேரம் கடைகள் திறப்பதால் தமிழகத்தில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்: ஓட்டல் சங்கம் வரவேற்பு

சென்னை: 24 மணி நேரம் கடைகள் திறப்பால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்று தமிழ்நாடு ஓட்டல் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் வெங்கடசுப்பு அளித்த பேட்டி: தமிழகத்தில் ஓட்டல்களை 24 மணி நேரமும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று போலீஸ் டிஜிபியிடம் பல முறை மனு கொடுத்துள்ளோம். அது மட்டுமல்லாமல் சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளோம்.

இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. அமைச்சரிடமும் இது தொடர்பாக நேரில் வலியுறுத்தியுள்ளோம். ஆனால் கடைகளை திறக்க அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் கடைகளை திறக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 24 மணி நேரம் கடைகளை திறக்க அனுமதியால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். அரசுக்காக வருமானம் அதிகரிக்கும்.

கடைகளில் சிசிடிவி கேமரா, விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதால் மக்களுக்கான பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்படும். மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருபவர்கள், ஐ.டி. நிறுவனங்களில் வேலை முடிந்து வருபவர்கள் 24 மணி நேரம் கடை திறப்பால் பலன் அடைவார்கள். 24 மணி நேரம் கடை திறந்திருக்கும் என்ற தமிழக அரசின் அரசாணையை ஓட்டல் உரிமையாளர் சங்கம் வரவேற்கிறது. இவ்வாறு அவர் கூறினார். 


Tags : Opening ,shops ,Tamil Nadu ,hotel association , Work, neglect, staff, intimidation
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி