×

அரைகுறை ஆடையுடன் சிக்கினார் லாட்ஜில் பெண்ணுடன் ஏட்டு உல்லாசம்: சேலத்தில் அதிகாரிகள் நடவடிக்கை

சேலம்: சேலத்தில் லாட்ஜில் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த ஏட்டு அரைகுறை ஆடையுடன் சிக்கினார். இதனால் அவர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாநகரில் நேற்றுமுன்தினம் 6 ஏட்டுக்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் 2 பேர் பாலியல் குற்றச்சாட்டின் அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

இவர்களில் ஒருவர், கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள லாட்ஜூக்கு இளம்பெண்களை அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். அடிக்கடி பெண்களை அழைத்து செல்வதை தெரிந்து கொண்ட லாட்ஜில் வேலை பார்க்கும் ஊழியர்கள், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்த தகவல் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு கிடைத்தது.

இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவரை அழைத்துக் கொண்டு ஏட்டு சென்றது நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அதிகாரி ஒருவர் தலைமையில் 5 போலீசார், அந்த லாட்ஜை முற்றுகையிட்டனர். அதிரடியாக அறைக்குள் சென்றபோது, அந்த ஏட்டு அரைகுறை ஆடையுடன் சிக்கினார்.

அங்கிருந்த பெண்ணை எச்சரித்து அனுப்பிய போலீசார், ஏட்டுவை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து விசாரித்தனர். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் இதுபோன்று பெண்களுடன் லாட்ஜூக்கு சென்று உல்லாசமாக இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்தே அவர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேநேரத்தில் மாற்றப்பட்டவர்களில் மற்றொருவருடைய மனைவி நேற்று கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து பரபரப்பு புகாரை கூறியுள்ளார்.

அதில், தனது கணவருக்கும், பெண் ஒருவருக்கும் தவறான தொடர்பு இருக்கிறது. இதனால் அவர் வீட்டிற்கு வருவதில்லை. வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு அந்த பெண்ணுடைய வீட்டிற்கு சென்று விடுகிறார். எங்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கான எந்த செலவும் அவர் செய்வதில்லை. அந்த பெண் வீட்டிலேயே கிடக்கிறார். அவரை வேலையில் இருந்து நீக்க வேண்டும்’’ என கூறியுள்ளார். இதையடுத்தே அவரும் மாற்றப்பட்டுள்ளார்.

Tags : Shelter ,lady , Half-dressed, trapped, lady with lust, enjoyment
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகள்...