×

ஆழ்வார்திருநகரி அருகே கார் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் படுகாயம்

ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் அடுத்த ஆழ்வார்திருநகரியில் கார் கவிழ்ந்தது. இதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்த ஆழ்வார்திருநகரி அருகே உள்ளது கேம்லாபாத். இங்கு நேற்று நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த மாசானமுத்து மகன் முனீஸ்வரன் (33), கீழக்கரையை சேர்ந்த விஜயராஜா மகன் லோகேஷ் (வயது 27) அதே ஊரைச் சேர்ந்த ஆத்தி முத்து மகன் விஜயன் (24) மற்றும் பிரான்சிஸ், லிங்கம், வேல்முருகன் ஆகியோர் ஒரு காரில் வந்தனர். திருமண நிகழ்ச்சி முடிந்த பின்னர் இவர்கள் அனைவரும் காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

ஆழ்வார்திருநகரி அருகே ஆலங்குடி பக்கமுள்ள ஆற்றங்கால்் பாலத்தில் நிலை தடுமாறிய கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அந்த காரில் பயணம் செய்த 6 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களின் கூக்குரல் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு வைகுண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆழ்வார்திருநகரி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பாலத்தில் அடிக் கடி விபத்து நடப்பதால், ஒரு ஆண்டுக்கு முன் விரிவுப் படுத்தி கட்டியதோடு, அதன் அருகில் விபத்து பகுதி வாகனங்கள் மெது வாக செல்லவும் என போர்டு வைத்துள்ளனர்.

Tags : car crash ,Alwarthirunagar , Alwarthirankari, car
× RELATED வாகன விபத்தில் டிரைவர் பலி