புற்றுநோயியல் படிப்பில் சேர முடியாது என்ற விதியில் தளர்வு

மதுரை : அகில இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளைத் தளர்த்தி உயர் சிறப்பு மருத்துவம் பயில ஐகோர்ட் மதுரைக்கிளை அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. குழந்தை மருத்துவத்தில் எம்.டி., படித்தவர்கள் டி.எம். புற்றுநோயியல் படிப்பில் சேர முடியாது என்ற விதியில் தளர்வு ஏற்பட்டுள்ளது. டி.எம். புற்றுநோயியல் எனப்படும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பில் சேர நீட் தேர்வை எழுத அனுமதிக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரவிச்சந்திர பாபு, செந்தில்குமார் அமர்வு மனுதாரர் சதீஷ்குமாருக்கு மட்டும் தேர்வு எழுத அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

Tags : Relaxation , join the course of cancer
× RELATED கடகம்