லண்டன் : உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் விலகினார். தனது தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வந்த நிலையில் தொடரிலிருந்து விலகுவதாக டேல் ஸ்டெய்ன் அறிவித்துள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி நாளை மோதவுள்ள நிலையில் தற்போது விலகியுள்ளார்.