×

மேகதாதுவில் புதிய அணை கட்ட திட்ட அறிக்கை தாக்கல் செய்தால் மத்திய அரசிடம் அனுமதி பெற்று தரப்படும்: அமைச்சர் சதானந்த கவுடா

டெல்லி: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட திட்ட அறிக்கையை தயாரித்து  தாக்கல் செய்தால் மத்திய அரசிடம் அனுமதி பெற்று தரப்படும் என்று மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கூறியிருப்பது தமிழக விவசாயிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேகதாது என்ற இடத்தில் ரூ.5,912 கோடி மதிப்பில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கான வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு கடந்தாண்டு ஒப்புதல் அளித்த நிலையில் திட்ட அறிக்கை கர்நாடக அரசு தாக்கல் செய்யவில்லை என்று மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கூறியுள்ளார். இதுவரை அந்த திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தாக்கல் செய்யவில்லை என்றும் இதில் யாரும் அரசியல் செய்யக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தாக்கல் செய்தால் மேகதாதுவில் புதிய அணை கட்ட அனுமதி பெற்று தரப்படும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவின் இந்த பேச்சு தமிழக விவசாயிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவிரி நதி நீர் பங்கீட்டுக்கே தமிழகமும், கர்நாடகாவும் பல்வேறு ஆண்டுகளாக போராடி வரும் நிலையில் மேகதாதுவில் கர்நாடகா புதிய அணை கட்ட அனுமதி பெற்றுத்தருவோம் என்று மத்திய அமைச்சர் ஒவரே கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Sadananda Gowda ,Union ,government , new dam, Meghatadavu , Union government ,Minister Sadananda Gowda
× RELATED மோசடி குறுஞ்செய்திகளை அனுப்பிய...