×

கேஷ்-பேக் ஆபர்ல சிக்காதீங்க பே-டிஎம், போன்-பே பெயரில் பித்தலாட்டம்

‘ஸ்டேட் பாங்க் மானேஜர்’ பேசுறேன். உங்களுக்கு புதிய ஏடிஎம் கார்டு அனுப்ப வேண்டும். உங்கள் பழைய கார்டு நம்பர், சிவிவி எண் சொல்லுங்க என்று மோசடி செய்து வருகிறது பீகார் கும்பல். இந்த மோசடி பலருக்கு தெரிந்து விட்டதால் உஷார் ஆகிவிட்டனர். சில அப்பாவிகள்தான் நம்பி சிக்கி விடுகின்றனர்.

இந்த பீகார் கும்பல், தற்போது புது மோசடியில் இறங்கியுள்ளது. யுபிஐ எனப்படும் பீம் அடிப்படையிலானபே-டிஎம், போன்-பே மற்றும் இதர யுபிஐ ஆப்ஸ்கள் மூலம் பணம் செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது அவர்களை குறிவைத்து இந்த மோசடி கும்பல் பணம் கறக்கும் வேலையில் இறங்கியுள்ளது. முதலில் போன்-பே பெயரில் ஒரு எஸ்எம்எஸ் தகவல் வருகிறது.

அதில் ரூ.2,500 ஐ போன்-பே மூலமாக செலுத்தும்படி பே-டிஎம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கீழே உள்ள http://phon.pe/67jfaugp என்ற லிங்கை அப்ரூவ் செய்யும்படி வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. சிறிது நேரத்தில் 06202319948 என்ற செல்போனில் ஒரு அழைப்பு வருகிறது. ட்ரூ காலரில் இந்த எண் ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில் தமிழில் பேசும் நபர், ‘‘சார் நீங்கள் போன் பே பயன்படுத்துகிறீர்களா. உங்களுக்கு கேஷ் பேக் அனுப்ப வேண்டும். உங்களுக்கு வந்துள்ள லிங்க்கை அப்ரூப் செய்யுங்கள் என வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. அதை தொட்டால், paytm-14676198@paytm என்ற கணக்கில் ரூ.2,500 செலுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது மோசடி கும்பல், போன்-பே-யில் paytm என்ற பெயருடன் யுபிஐ அடையாள குறியீட்டை உருவாக்கியுள்ளனர்.

இதனால் பே-டிஎம்மில் இருந்து கேஷ் பேக் கோரிக்கை வருகிறது என்று எஸ்எம்எஸ் வரும்போது பயனாளர்கள் எளிதாக ஏமாந்து விடுகின்றனர். எனவே, இப்படி ஏதேனும் கேஷ்பேக், இதர சலுகைகள் வழங்குவதாக கோரிக்கை வந்தால் நிராகரித்து விடுங்கள். இல்லையென்றால் உங்கள் பணம் பறிபோய்விடும். ஏமாற்றி பணம் பறிக்கவே ரூம்போட்டு யோசிப்பார்கள் போல. அலட்டா இல்லேன்னா அம்புட்டுதான் போங்க.

Tags : Cash-Back aperla, chuckle, pay-tm, phone-bay, cynicism
× RELATED மே-04 : பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34 – க்கு விற்பனை