×

நந்தா தேவி சிகரத்தில் மாயமான மலையேற்ற வீரர்கள் சடலம் மீட்பு

பிதோரகர்: உத்தரகாண்ட் மாநிலம், பிதோரகர் மாவட்டத்தில் உள்ள நந்தா தேவி சிகரத்திற்கு இங்கிலாந்து மலையேற்ற பயிற்சியாளர் மார்ட்டின் மோரன் தலைமையில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை சேர்ந்த 8 மலையேற்ற வீரர்கள் கடந்த மாதம் 13ம் தேதி சென்றனர். முன்சியாரி பகுதியில் இருந்து மலையேற்றத்தை தொடங்கிய அவர்கள் மாயமாகினர். அவர்களை தேடும் பணி நடந்தது. இந்நிலையில், நந்தா தேவி கிழக்கு சிகரம் அருகே மாயமான 8 பேரில் 5 பேரின் சடலங்கள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. பனிச்சரிவில் சிக்கி, அவர்கள் இறந்ததாக கருதப்படுகிறது. மற்றவர்களை தேடும் பணி தொடர்கிறது.

Tags : Nanda Devi , Nanda Devi Peak, Mystic, Trekking Players, Body Recovery
× RELATED ஒரே நாளில் 62,538 பேர் பாதிப்பு இந்தியாவில் புதிய உச்சம்