×

கொச்சி மருத்துவமனையில் சிகிச்சை மாணவருக்கு நிபா காய்ச்சல்

திருவனந்தபுரம்: கொச்சியில் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் மாணவர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் கடந்தாண்டு நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது. இதற்கு சிகிச்சை அளித்த லினி என்ற நர்ஸ் உள்பட 17 பேர் இறந்தனர். கேரள சுகாதாரத் துறையின் தீவிர நடவடிக்கை காரணமாக இந்த காய்ச்சல் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் படித்த மாணவர் காய்ச்சல் காரணமாக கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு நிபா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது.

எனவே, கூடுதல் பரிசோதனைக்காக ஆலப்புழாவில் உள்ள நுண்ணுயிரி பரிசோதனை கூடத்துக்கு அவரது ரத்த மாதிரி அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று ரத்த பரிசோதனை அறிக்கை வந்தது. அதில், அவருக்கு நிபா பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் அறிந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மாணவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா நேற்று மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அதிகாரிகளுடனஜ் ஆலேசனை நடத்தினார். பின்னர், அவர் அளித்த பேட்டியில், ‘‘வாலிபரிடம் நடத்திய முதற்கட்ட சோதனையில் நிபா இருப்பது தெரிய வந்துள்ளது. கூடுதல் பரிசோதனைக்காக அவரின் ரத்த மாதிரி பூனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த பரிசோதனை விவரம் வந்த பின்னர்தான் அவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதை உறுதியாக கூறமுடியும்,’’ என்றார்.

Tags : treatment hospital ,hospital ,Kochi , Kochi, hospital treatment, student, nibah fever
× RELATED கொச்சி விமான நிலையத்தில் ₹6.68 கோடி...