×

சதுரகிரி கோயில் அன்னதான மடங்களை மூட முடிவு: சுந்தர மகாலிங்கம் கோவில் நிர்வாகம் நடவடிக்கை..!

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமாகாலிங்கம் சுவாமி கோவிலில் அன்னதான மடங்களை நிரந்தரமாக மூட கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் செயல் அலுவலர் சிவராமசூரியன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் கடைகளில் இனி உணவுப் பொருட்கள் விற்க அனுமதியில்லை. பூஜை பொருட்கள் மட்டுமே விற்கப்படும். கோவில் பெயரை பயன்படுத்தி பணம் வசூல் செய்வதாக வந்த புகாரை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறநிலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சதுரகிரி கோவில் வளாகத்தில் உள்ள கடைகளில் உணவு பொருட்கள் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சதுரகிரி சுந்தரமாகாலிங்கம் கோவில் தரிசனத்திற்கு பக்தர்களை தினமும் அனுமதிப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய மலைக்கோவிலில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பக்தர்கள் மலையேற மாதத்தில் 8  நாட்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

Tags : Sathuragiri Temple ,Annals ,temple administration action ,Munnar ,Sundara Mahalingam , Chaturagiri Temple, Anna Math
× RELATED மோசடி நபர்கள் குறித்து எச்சரிக்கை...