×

யார் மீதும் எந்த மொழியையும் திணிக்கும் எண்ணம் இல்லை: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

டெல்லி: யார் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விளக்கமளித்துள்ளார். எந்த மாநிலத்திலும் எந்த மொழியும் திணிக்கப்படக்கூடாது எனவும் கூறினார். மும்மொழிக்கொள்கை என்பது வரைவில் தான் உள்ளது; அரசின் கொள்கை முடிவு அல்ல என்று ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் கருத்தை அறிந்த பின்பே கொள்கை முடிவு எடுக்கப்படும் என்று விளக்கமளித்துள்ளார். மும்மொழிக் கல்வியை அறிமுகப்படுத்தி தமிழகத்தில் இந்தி திணிக்கப்படும் என்று புதிய கல்விக்கொள்கை வரைவு வெளியானது. தமிழகத்தில் இந்தியை திணிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் மத்திய அமைச்சர் பொக்ரியால் விளக்கமளித்துள்ளார்.

கஸ்தூரி ரங்கன் குழு வரைவு அறிக்கையை மட்டுமே சமர்ப்பித்துள்ளது எனவும், இது கொள்கை முடிவல்ல எனவும் கூறினார். அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்குவிக்க வேண்டும் என விரும்புகிறேன் எனவும் கூறினார். மும்மொழி கொள்கை குறித்து அறிக்கையை குழு தயாரித்துள்ளது என தெரிவித்தார். பொது மக்களின் கருத்து கேட்ட பின்னர் தான் மத்திய அரசு தனது முடிவை எடுக்கும் எனவும் கூறினார். தற்போது வெளியாகியுள்ளது வரைவு அறிக்கை மட்டுமே எனவும், மக்களின் கருத்துகளை கேட்டபிறகே முடிவு எடுக்கப்படும் என கூறினார்.

Tags : Ramesh Pokhriyal , no intention, impeding,any language, Prakash Javadekar
× RELATED வரும் கல்வியாண்டில்...