×

ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பிற்கு நிதி திரட்டியதாக கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் 5 ஆண்டு சிறை

லாகூர்: பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நேற்று அதிரடி சோதனை நடத்தி பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் மற்றும் அவர்களுக்கு நிதி வழங்குவோரை கைது செய்கின்றனர். பயங்கரவாத அமைப்புக்கு உதவியதாக பலர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ஏராளமான பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவர்கள் மீது பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பிற்கு நிதி திரட்டியதாக கைது செய்யப்பட்ட இப்திகார், முகமது அஜ்மல் மற்றும் பிலால் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நேற்று நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து, அவர்கள் மூன்று பேருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து  நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணையில், கைது செய்யபட்டவர்கள் இந்தியாவில் 2008-ம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் கைது செய்யபட்ட 3 பேரும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டணை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Tags : Jaish-e-Mohammed ,terrorists ,arrest , Jaish-e-Mohammed,sentenced,years imprisonmen, arrest, three terrorists
× RELATED ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில்...