பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்: அடுத்த சுற்றுக்கு முன்னேறியது லியாண்டர் பயஸ் ரோகன் போபண்ணா ஜோடி

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் ரோகன் போபண்ணா ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்திய வீரர் ரோகன் போபண்ணா மற்றும் ருமேனிய வீரர் மாரிஸ் காபில் ஜோடி பிரான்சின் பெஞ்சமின் போன்ஜி மற்றும் அன்டோயன் ஹாங் ஜோடியை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் 6–4, 6–4 என்ற நேர்செட்டில் போபண்ணா ஜோடி வெற்றி கண்டது. இதேபோல், மற்றொரு இந்திய வீரர் லியாண்டர் பயஸ் மற்றும் பிரான்ஸ் வீரர் பெனோயிட் பெய்ர் ஜோடி சுலோவோக்கியா வீரர் மார்ட்டின் கிசான் மற்றும் இங்கிலாந்து வீரர் டொமினிக் இங்லாட் ஜோடியை எதிர்கொண்டது.இந்த போட்டியில் பயஸ் ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட்டில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

Related Stories:

>