×

பிரெஞ்ச் ஓபன் முதல் சுற்று; டொமினிக் தீம் அதிர்ச்சி தோல்வி: ஸ்வரெவ் போராடி வெற்றி

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் தோல்வியடைந்துள்ளார். ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரெவ், சக வீரர் ஆஸ்கர் ஒட்டேவுக்கு எதிரான போட்டியில் 5 செட்களில் கடும் போராட்டத்திற்கு பின்னர் ெவற்றி பெற்றுள்ளார். இந்த ஆண்டின் 2வது கிராண்ட்ஸ்லாமான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நேற்று பாரிசில் துவங்கின. கடந்த ஆண்டு யு.எஸ்.ஓபனில் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்த ஆஸ்திரியா வீரர் டொமினிக் தீம், நேற்று நடந்த பிரெஞ்ச் ஓபன் முதல் சுற்று போட்டியில், ஸ்பெயின் வீரர் பாப்லோ அண்டுஜாருடன் மோதினார். ஏடிபி தரவரிசையில் தற்போது 4ம் இடத்தில் உள்ள டொமினிக் தீம், இந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனில் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை ெவல்லக் கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு, பாப்லோவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் முதல் செட்டை டொமினிக் தீம் 6-4 என எளிதாக கைப்பற்றினார். 2வது செட்டில் பாப்லோ திறமையாக ஆடினார். இருப்பினும் 7-5 என அந்த செட்டையும் தீம், கைப்பற்றினார். தொட்டு விடும் தூரத்தில் வெற்றி என்ற நிலையில் 3வது செட்டை 6-3 என பாப்லோ கைப்பற்றி, அதிர்ச்சியளித்தார். தொடர்ந்து 4வது செட்டையும் 6-4 என பாப்லோ வசப்படுத்தினார். 5 செட்டையும் 6-4 என பாப்லோ கைப்பற்றி, தீமின் பிரெஞ்ச் ஓபன் கனவை முடித்து வைத்தார்.ஏடிபி தரவரிசையில் 6ம் இடத்தில் உள்ள ஜெர்மனியின் இளம் நட்சத்திரம் அலெக்சாண்டர் ஸ்வரெவ், நேற்று நடந்த முதல் சுற்றில் சக வீரர் ஆஸ்கர் ஒட்டேவை எதிர்த்து மோதினார். இதில் முதல் 2 செட்களை 6-3, 6-3 என்ற கணக்கில் ஒட்டே கைப்பற்ற, போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியது. இருப்பினும் நிதானமாக ஆடிய ஸ்வரெவ், அடுத்தடுத்து 3 செட்களை 6-2, 6-2, 6-0 என கைப்பற்றி, ஒரு வழியாக வெற்றி பெற்றார். பின்னர் ஸ்வரெவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘டொமினிக் தீம் என்னுடைய பெஸ்ட் ஃபிரெண்ட் என்பது எல்லோருக்கும் தெரியும். அவரது தோல்வி என்னை வெகுவாக பாதித்து விட்டது. இதனால் போட்டியில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. அந்த பாதிப்பில் இருந்து நான் மீண்டு வருவதற்குள், 2 செட்களை இழந்து விட்டேன். அதன் பின்னர் மனதை ஒருநிலைப்படுத்தி, ஆடினேன். நேற்று மாலை வரை நானும், தீமும் சேர்ந்துதான் பயிற்சி எடுத்துக் கொண்டோம். அவர் களிமண் தரையில் சிறப்பாக ஆடக் கூடியவர். அவரது தோல்வியை என்னால் நம்ப முடியவில்லை’’ என்று தெரிவித்தார். முதல் சுற்றில் ஏடிபி தரவரிசையில் 5ம் இடத்தில் உள்ள கிரீஸ் வீரர் ஸ்டெபனாஸ் சிட்சிபாஸ், பிரான்ஸ் வீரர் ஜெரேமி சார்டியை 7-6, 6-3, 6-1 என நேர் செட்களில் வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.அசரென்கா முதல் சுற்றில் வெற்றிஇந்திய நேரப்படி மகளிர் ஒன்றையர் பிரிவில் இன்று அதிகாலை நடந்த போட்டி ஒன்றில், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் (27), 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில், பிரான்சின் ஒசேன் டோடினை வீழ்த்தினார். பெராலசின் விக்டோரியா அசரென்கா(31), ரஷ்யாவின் ஸ்வெட்லானாவை சாய்த்தார். பெலாரசின் ஆர்யனா சபலென்கா, 6-4, 6-3 என குரோஷியாவின் அனா கொன்ஜூவை வீழ்த்தினார். செக்குடியரசின் பெட்ரா க்விடோவா, சினியகோவா உள்ளிட்டோரும் முதல் சுற்றில் வென்றனர்….

The post பிரெஞ்ச் ஓபன் முதல் சுற்று; டொமினிக் தீம் அதிர்ச்சி தோல்வி: ஸ்வரெவ் போராடி வெற்றி appeared first on Dinakaran.

Tags : French Open First Round ,Dominic Thiem ,Zwarev ,Paris ,Austria ,French Open Grand Slam ,Germany ,Alexander ,Swarev ,Dinakaran ,
× RELATED வாட்டர்ஜென் டென்னிஸ்: முதல் சுற்றில் டொமினிக் தீம் வெற்றி