×

மன்மோகன் சிங் முன் மொழிய நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு

புதுடெல்லி: நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் சோனியா காந்தியின் பெயரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முன் மொழிந்தார். இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அரங்கில் காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அறுதி பெருமான்மையுடன் பாஜ தலைமையிலான தேசிய கூட்டணி கட்சி வெற்றியை 2-வது தக்க வைத்துள்ளது. அதன்படி 2-வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்.பிக்கள் கூட்டம் இன்று நாடாளுமன்றத்தில் உள்ள மைய மண்டபத்தில் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் 52 எம்.பிக்கள் மற்றும் மாநிலங்களவை எம்.பிக்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்றது. முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் முடிவில் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் குழு தலைவராக ஒரு மனதாக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார். நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தியின் பெயரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முன்மொழிந்தார். இதையடுத்து, சோனியாகாந்தியை மீண்டும் காங்கிரஸ் கட்சி தலைவராக எம்.பிக்கள் தேர்வு செய்தனர். இதையடுத்து நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைத்ததற்கான காரணங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதேபோல வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி எம்பி-க்கள் மத்தியில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி உரையாற்றினார்கள்.

சோனியா காந்தி நன்றி:


காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த 12 கோடி வாக்காளர்களுக்கு சோனியா காந்தி நன்றி தெரிவித்துள்ளார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில் பேசிய அவர், தொகுதி மக்களின் குறைகளை தீர்க்க காங்கிரஸ் எம்பிக்கள் முழுமையாக பணியாற்ற உத்தரவிட்டுள்ளார். மேலும், மோடி ஆட்சியின் அவலங்களை நாட்டு மக்களிடம் விளக்கி பிரச்சார செய்த ராகுல் காந்தியை சோனியா பாராட்டியுள்ளார்.

ராகுல் காந்தி குற்றச்சாட்டு:

இதனை தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, காங்கிரசுக்கு எதிரான வெறுப்பு அரசியலை பாஜக மேற்கொண்டதாக குற்றம் சாட்டினார். காங்கிரஸை இழிவாகவும், தரக்குறைவாகவும் பாஜக விமர்சிப்பதாக கூறியுள்ளார். மேலும், தீரத்துடன், விவேகத்துடன் செயல்படுமாறு காங்கிரஸ் எம்.பிக்களுக்கு ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.

Tags : Sonia Gandhi ,Manmohan Singh , Congress Party leader Sonia Gandhi, select
× RELATED மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் சோனியா காந்தி..!!