×

புகையிலையை ஒழித்து இசையை ரசியுங்கள்: சன் மியூசிக் விழிப்புணர்வு பிரசாரம்

சென்னை: சன் மியூசிக் சார்பில் ‘புகையிலையை ஒழித்து இசையை ரசியுங்கள்’ என்ற விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பார்வையாளர்களுக்கு புகையிலை ஒழிப்பு தொடர்பாக ஒரு சிறிய முயற்சியை சன் மியூசிக் சேனல் முன்னெடுத்துள்ளது. சிகரெட் அட்டை போன்ற ஒரு பெட்டியில் சிகரெட்டிற்கு பதில்  புல்லாங்குழலை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. சிகரெட் பெட்டிக்குள் புல்லாங்குழலை வைத்தது, தோற்றத்தில் அது சிகரெட்டை ஒத்திருப்பது போன்ற காரணத்தினாலும் புல்லாங்குழலை இசைக்கும்போது அது நுரையீரலுக்கு ஒரு சிறந்த பயிற்சியை கொடுக்கும் என்பதாலும்தான். சிகரெட்டால்  பாதிக்கப்பட்ட நுரையீரல் புல்லாங்குழல் இசைப்பதன் மூலம் பலப்படும். மேலும் புல்லாங்குழல் இசைப்பதன் மூலம் உடல் திறன் மேம்படுவதோடு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவும்.   

 இந்த பிரசாரத்தின் மற்றொரு பகுதியாக போட்டி ஒன்றையும் சன் மியூசிக் சேனல் நடத்துகிறது. அதன்படி, பொதுமக்கள் எப்படி சிகரெட் பழக்கத்தை கைவிட்டார்கள் என்பது குறித்த வீடியோ பதிவை சன் மியூசிக்கிற்கு அனுப்ப வேண்டும்.  வீடியோ அனுப்பும் பொதுமக்களுக்கு சன் மியூசிக் சார்பில் புல்லாங்குழல் மற்றும் புல்லாங்குழல் இசைக்கும் முறை குறித்த கையேடும் அனுப்பப்படும். இந்த விழிப்புணர்வு பிரசாரத்தின் மூலம் சிகரெட் பிடிப்பவர்கள் அதை கைவிடுவார்கள் என்று  நம்புவதாக சன் மியூசிக் தெரிவித்துள்ளது.




Tags : Sun Music , Tobacco, music, sun music, awareness campaign
× RELATED டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் மரணம்