×

கடந்த நிதியாண்டில் புதிய சாதனை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லாபம் 258 கோடியாக அதிகரிப்பு

தூத்துக்குடி: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபத்தில் புதிய சாதனை படைத்துள்ளது. 2018-19ம் நிதியாண்டில் நிகர லாபம் ரூ.258.58 கோடியாக அதிகரித்துள்ளது.  இதுதொடர்பாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைவர் அண்ணாமலை, தலைமை நிர்வாக அதிகாரி ராமமூர்த்தி ஆகியோர் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  2018-19ம் நிதியாண்டில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மொத்த வணிகத்தில் 9.91% வளர்ச்சி அடைந்து ரூ.62,165.66 கோடியை எட்டியுள்ளது. வைப்புத் தொகை ரூ.35,136.25 கோடி என்ற நிலையை அடைந்துள்ளது. கடன்களை பொறுத்தமட்டில்  ரூ.27,029.41 கோடி என்ற நிலையில் உள்ளது. விவசாயம், குறு, சிறு தொழில் கடன், வியாபாரக் கடன், வீட்டுக்கடன் மற்றும் கல்விக்கடன் துறைகளுக்கு தொடர்ந்து அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. வங்கியின்  நிகர லாபம் ரூ.258.58  கோடி ஆகும். இது கடந்த ஆண்டு 221.92 கோடியாக இருந்தது.

இந்த ஆண்டு சில்லரை வர்த்தக கடன்கள் வழங்குவது முக்கிய இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் மனித வள மேம்பாட்டின் மூலம்  வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான வங்கி சேவை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. 2019-20ம் நிதியாண்டில் மொத்த வணிகம் ரூ.76,500 கோடியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். பேட்டியின் போது துணைத் தலைவர் சிதம்பரநாதன், இயக்குநர்கள் அசோக், அசோக்குமார்,  கேசவமூர்த்தி, நாகராஜன், நிரஞ்சன் கனி, விஜயதுரை, சிவகாமி, கோபால், எழில் ஜோதி வங்கியின் பொதுமேலாளர்கள் செந்தில் ஆனந்தன், இன்பமணி,  சூரியராஜ், ஆறுமுகபாண்டி மற்றும்  அதிகாரிகள் உடனிருந்தனர்.


Tags : Tamil Nadu Mercantile Bank , Tamil Nadu Mercantile Bank
× RELATED தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 549வது கிளை திறப்பு விழா