×

சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ததற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

சென்னை : 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்துள்ள ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ள மத்திய அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக உச்சநீதிமன்றத்தில் செய்துள்ள மேல்முறையீட்டை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் வேண்டும் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தல் முடிந்த பிறகு இப்பொது மேல்முறையீடு செய்திருப்பது தமிழக மக்களுக்கு செய்யும் மன்னிக்க முடியாத துரோகம் என்று கூறிய ஸ்டாலின், மோடி தலைமையில் மத்தியில் அரசு பதவியேற்ற மறுநாளே மக்கள் விரோத நடவடிக்கையில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது என்றும் கூறினார்.மேலும் தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் பதவி கூட தராமல் மோடி அரசு அவமதித்துள்ளது என்றும் தமிழக மக்களின் வாழ்வாதாரத்துடன் பாஜக அரசு இனியும் விபரீத விளையாட்டு நடத்த வேண்டாம் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Stalin ,DMK ,government ,Tamil Nadu ,Salem 8 , Row, appeal, federal minister, Stalin, condemned
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...