×

சிறுவர்களை அடிமையாக்கும் சிகரெட் நிறுவனங்களை தண்டிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ்நேற்று வெளியிட்ட அறிக்கை:  
உலக புகையிலை ஒழிப்பு நாள் மே 31ம் தேதி கடைபிடிக்கப்படும் நிலையில், ‘புகையிலை உங்கள் மூச்சை எடுத்துச் செல்ல அனுமதிக்காதீர், நுரையீரல் நலனை காப்பாற்ற வேண்டும்’ என்பதை இந்த நாளின் நோக்கமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், இம்முழக்கத்துக்கு முற்றிலும் மாறாக சென்னையில் சட்டவிரோத புகையிலை விளம்பரங்களை சிகரெட் நிறுவனங்கள் வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. ‘அடுத்த தலைமுறையினருக்காக புதியது உருவாகிறது’ என்ற வாசகத்துடன் ஐ.டி.சி நிறுவனம் சென்னை மாநகரம் முழுவதும் சிகரெட் விளம்பரங்களை செய்துள்ளது. இது சட்டவிரோத செயல் ஆகும். சிறுவர்களை சீரழிக்கும் இந்த விளம்பரங்களை எந்த வகையிலும் மன்னிக்க முடியாது.

இந்திய புகையிலை கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் புகையிலை விளம்பரங்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளன. தடையை மீறி விளம்பரம் செய்வோர் மீது ஐந்தாண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கவும் சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த சட்டங்களையும், விதிகளையும் காற்றில் பறக்கவிட்டு சிறுவர்களை சீரழிக்கும் வகையில் சட்டவிரோத விளம்பரங்களை புகையிலை நிறுவனங்கள் துணிச்சலாக செய்வது ஆட்சியாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் விடப்பட்ட அப்பட்டமான சவால்.சிறுவர்களின் எதிர்காலத்தை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.


Tags : Cigarette firms ,Ramdas , Children, addicting, cigarette company, penalize, Ramadoss, assertion
× RELATED வெந்நீரை கொட்டினா மாதிரி கொதிக்குது...