இன்று பாகிஸ்தானுடன் மோதல் ஆதிக்கம் செலுத்துமா வெஸ்ட் இண்டீஸ்

நாட்டிங்காம்: உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானிடம் அதிக போட்டியில் வென்றுள்ள இன்றைய போட்டியிலும் வெஸ்ட்இண்டீஸ் ஆதிக்கம் செலுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது போட்டி நாட்டிங்காமில் இன்று பிற்பகல் நடைபெற உள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ்-பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்த 2 அணிகளும் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடியது உலக கோப்பை போட்டியில் தான். இங்கிலாந்தில்  1975ம்ஆண்டு நடைப்பெற்ற முதல் உலக கோப்பைதான் இது. இந்த 2 அணிகளும் மோதிய அந்தப்போட்டியில் வெ.இண்டீஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் 1979, 1983ம் ஆண்டுகளில் நடைப்பெறற உலக கோப்பை போட்டிகளில் இந்த 2 அணிகளும் அரையிறுதிப் போட்டிகளில் மோதின. அந்த 2 போட்டிகளிலும் வெ.இண்டீஸ் அணிதான் வெற்றிப்பெற்றது. ஆனால் 2011ம் ஆண்டு உலக கோப்பையில் இந்த அணிகள் மோதிய காலிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது. இப்படி உலக கோப்பையில் 2 அணிகளும் இதுவரை 9 முறை மோதியுள்ளன. அவற்றில் வெ.இண்டீஸ் 6 முறையும், பாகிஸ்தான் 3 முறையும் வெற்றிப் பெற்றன. கடைசியாக மோதிய 5 ஒருநாள் போட்டிகளில் 4ல் பாகிஸ்தான் வென்றுள்ளது.

ஆனால் 2017 ஏப்ரலுக்கு பிறகு 2 அணிகளும் ஒருநாள் போட்டிகளில் மோதியதில்லை. இந்த 2 அணிகளும் 1975ம் ஆண்டு முதல் 2017 வரை 133 ஒருநாள் போட்டிளில் விளையாடி உள்ளன. அதில் 70 போட்டிகளில் வெ.இண்டீசும், 60 போட்டிகளில் பாகிஸ்தானும் வென்றுள்ளன. மேலும் 3 போட்டிகளில் முடிவு இல்லை. பொதுவாக ஒருநாள் போட்டிகளில்  மட்டுமின்றி, உலக கோப்பையில் மோதிய போட்டிகளிலும் வெ.இண்டீஸ் அணியே ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. அதனால் இன்றைய போட்டியில் வெ.இண்டீஸ் பொங்குமா இல்லை பாகிஸ்தான் வேகத்தால் மங்குமா என்பது தெரிய வரும். இரண்டு அணிகளிலும் அதிரடி ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள். ஆனால் பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தானிடம் தோற்றுள்ளது. வெ.இண்டீஸ் அணி நியூசிலாந்தை தோற்கடித்துள்ளது.

Tags : West Indies ,conflict ,Pakistan , Today is Pakistan, conflict dominates, West Indies
× RELATED மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3...