×

கிண்டல் விளம்பரம்

இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை போட்டி நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் நேற்று களம் கண்ட இங்கிலாந்து - தென் ஆப்ரிக்கா அணிகள் இதுவரை உலக கோப்பையை வென்றேதே இல்லை. தென் ஆப்ரிக்கா 1992ம் ஆண்டிலிருந்துதான் உலக கோப்பையில் களம் கண்டது. இனவெறி பிரச்னையால் தள்ளி வைக்கப்பட்டிருந்த தென் ஆப்ரிக்கா ஒவ்வொரு முறையும் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக இருந்தது. ஆனால் மழையும், கிரிக்கெட் விதிகளும் அந்த அணியின் வாய்ப்புகளை மங்க செய்த வரலாறு  இருக்கிறது.

இங்கிலாந்து நிலைமைதான் மோசம். கிரிக்கெட்டின் தாயகம் இங்கிலாந்து. அந்நாடு தொடர்ந்து 3 உலக கோப்பை போட்டிகளை நடத்தியது. இப்போது 4 வது முறையாக உலக கோப்பை போட்டியை நடத்துகிறது. போட்டி நடத்திய நாடுகள் கோப்பையை வென்றுள்ளன. ஆனால் இந்த முறையாவது வாய்ப்பு கிடைக்குமா என்பது இங்கிலாந்து ரசிகர்களின் மட்டுமல்ல அரசியின் ஏக்கமும். அதனால் டீ கப்களுடன் கோப்பையை வென்ற நாடுகளின் வீரர்கள் இங்கிலாந்து - தென் ஆப்ரிக்கா வீரர்களை கிண்டல் செய்வதையும், அதை இங்கிலாந்து அரசி ராணி எலிசபெத் சோகமாக பார்ப்பது போல் டிவி விளம்பரங்கள் வருகின்றன.

Tags : Teasing, advertising
× RELATED பூரன் – ராகுல் அதிரடி ஆட்டம் மும்பையை வீழ்த்தியது லக்னோ