×

மூலைமுடுக்குகளில் எல்லாம் வீசிய மக்களின் கோப அலையால் தங்கள் தொகுதிகளிலேயே தேறாத அமைச்சர்கள்: திமுக அதிக வாக்குகளை அள்ளியது

சென்னை: மக்களவை தேர்தல் முடிவில் அமைச்சர்களின் சட்டப்பேரவை தொகுதியில் திமுக அதிக வாக்குகளை பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கையில் தமிழக அமைச்சர்கள் தங்களுடைய தொகுதியிலேயே அதிக வாக்குகள் பெறவில்லை. இதனால், தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சிக்கு எதிர்ப்பு அலைகள் கிளம்பி உள்ளதை காண முடிகிறது.  

தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 38 நாடாளுமன்ற தொகுதிகளில் மாபெரும் வெற்றியை பெற்றது. தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றியை பெற்றது. இதேபோல், 22 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் திமுகவும், 9 தொகுதிகளில் அதிமுகவும் வெற்றிபெற்றது.   

முதல்வர் மற்றும் அமைச்சர்களின் தொகுதியில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் மிக குறைவாகவே வாக்கு வங்கிகளை பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் அமைச்சர்களின் தொகுதியில் அக்கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சேலம் மக்களவை தொகுதி திமுகவின் வசமாகியுள்ளது.

ஏற்கனவே, சேலம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட எடப்பாடி தொகுதியில் 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வென்றார். ஆனால், தற்போது அதிமுக கூட்டணியில் மக்களவை தொகுதியில் அதிமுகவை விட திமுக 8 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் சேலம் தொகுதியில் அதிமுக கூட்டணி 2ம் இடத்திற்கு சென்றுள்ளது.
 
இதேபோல், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தொகுதி சிவகாசி ஆகும். இது விருதுநகர் மக்களவை தொகுதிக்குள் வருகிறது. இவரின் தொகுதியில் கடந்த தேர்தலை விட மிகவும் குறைவான அளவே வாக்குகளை அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் பெற்றுள்ளார். மொத்த வாக்குகளில் திமுக கூட்டணி 80 ஆயிரத்து 863 வாக்குகளும், அதிமுக கூட்டணி 43 ஆயிரத்து 158 வாக்குகளும் பெற்றுள்ளன.

இதனால், 2ம் இடத்திற்கு அதிமுக கூட்டணி தள்ளப்பட்டது. கிட்டத்தட்ட 37 ஆயிரம் வாக்கு வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் தங்கமணியின் ஈரோடு மக்களவை தொகுதிக்கு உட்பட்ட குமாரபாளையம் சட்டப்பேரவை தொகுதியில், மக்களவை தேர்தலில் திமுக 86 ஆயிரத்து 683 வாக்குகளும், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டவர் 65 ஆயிரத்து 323 வாக்குகளும் பெற்றுள்ளது. இதில் திமுகவை விட அதிமுக 21 ஆயிரத்து 360 வாக்குகள் குறைவாக பெற்றுள்ளது.

எஸ்.பி.வேலுமணியின் தொண்டாமுத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் திமுக 96 ஆயிரத்து 218 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளர்  75 ஆயிரத்து 127 வாக்குகளும் மக்களவை தேர்தலில் பெற்றுள்ளனர். இத்தொகுதியில் அதிமுகவை கூட்டணியை விட திமுக 21 ஆயிரத்து 91 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளது.

மேலும், அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிட்டு வெற்றிபெற்ற ராயபுரம் தொகுதி வடசென்னையில் வருகிறது. மக்களவை தேர்தலில் இங்கு அதிமுக கூட்டணி வேட்பாளர் வெறும் 15 ஆயிரத்து 815 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். ஆனால், திமுக 69 ஆயிரத்து 987 வாக்குகளை அள்ளியுள்ளது. கிட்டத்தட்ட 54 ஆயிரத்து 172 வாக்குகள் அதிமுக கூட்டணி வேட்பாளரை விட திமுக கூடுதலாக பெற்றுள்ளது.

அமைச்சர் கே.பி.அன்பழகனின் பாலக்கோடு சட்டப்பேரவை தொகுதியில், மக்களவை தேர்தலில் திமுக 97 ஆயிரத்து 927 வாக்குகள் பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி 75 ஆயிரத்து 523 வாக்குகள் பெற்றுள்ளது. இதன்மூலம் அதிமுகவை கூட்டணி வேட்பாளரை விட இத்தொகுதியில் திமுக 22 ஆயிரத்து 204 வாக்குகளை கூடுதலாக பெற்றுள்ளது.

இதேபோல், அமைச்சர் கே.சி.வீரமணியின் ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில், மக்களவை தேர்தலில் திமுக 98 ஆயிரத்து 248 வாக்குகளும், அதிமுக கூட்டணி 61 ஆயிரத்து 861 வாக்குகளையும் பெற்றுள்ளது. அதிமுக கூட்டணியைவிட விட திமுக 36 ஆயிரத்து 387 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளது. அமைச்சர் சரோஜாவின் ராசிபுரம் சட்டப்பேரவை தொகுதியில், திமுக 1 லட்சத்து 6,708 வாக்குகளை பெற்றுள்ளது.

அதிமுக கூட்டணி வேட்பாளர் 96 ஆயிரத்து 269 வாக்குகளை பெற்றுள்ளார். இதன்மூலம், அதிமுக கூட்டணியை விட திமுக 10 ஆயிரத்து 439 வாக்குகளை கூடுதலாக பெற்றுள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் கரூர் சட்டப்பேரவை தொகுதியில் நடந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 1 லட்சத்து 11,333 வாக்குகளை பெற்றுள்ளது.

ஆனால், அதிமுக கூட்டணி வெறும் 48 ஆயிரத்து 616 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. இதன்மூலம் அதிமுக கூட்டணி வேட்பாளரை விட திமுக கூட்டணி 62 ஆயிரத்து 717 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளது. இதேபோல், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த தொகுதியான விராலிமலையில், மக்களவை தேர்தலில் திமுக 1 லட்சத்து 6,382 வாக்குகளையும், அதிமுக  கூட்டணி 40,104 வாக்குகளையும் பெற்றுள்ளது. இங்கு திமுகவிற்கு கூடுதலாக 66,278 வாக்குகள் கிடைத்துள்ளது.

அமைச்சர் வளர்மதியின் தொகுதியான ஸ்ரீரங்கம் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 1 லட்சத்து 18,653 வாக்குகளை பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி 50,128 வாக்குகளை பெற்றுள்ளது. அதிமுகவை விட 68,525 வாக்குகள் திமுக கூட்டணிக்கு கூடுதலாக கிடைத்துள்ளது. மதுரை மேற்கு தொகுதியில் அமைச்சர் செல்லூர் ராஜூவின் தொகுதியில் மக்களவை தேர்தலில், திமுக 82 ஆயிரத்து 22 வாக்குகளையும், அதிமுக கூட்டணி  55 ஆயிரத்து 208 வாக்குகளையும் பெற்றுள்ளது.

அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் தொகுதியான வேதாரண்யம், மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 67 ஆயிரத்து 376 வாக்குகளையும், அதிமுக கூட்டணி 48 ஆயிரத்து 948 வாக்குகளையும் பெற்றுள்ளது. இதே மக்களவை தொகுதிக்குட்பட்ட அமைச்சர் காமராஜின் நன்னிலம் தொகுதியில் திமுக கூட்டணி 1 லட்சத்து 8,059 வாக்குகளை பெற்றுள்ளது. ஆனால், அதிமுக கூட்டணி 62 ஆயிரத்து 51 வாக்குகள் மட்டுமே வாங்கியுள்ளது.

தேர்தலுக்கு முன்பு திமுகவிற்கு எதிராக பேசிய அதிமுக அமைச்சர்கள் பலருக்கும் இதேநிலை நிலைதான் காணப்படுகிறது. தமிழகம் முழுவதும் மூலை, முடுக்குகளில் கூட அதிமுகவிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதையே இது காட்டுகிறது. அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிட்டு வெற்றிபெற்ற ராயபுரம் தொகுதி வடசென்னையில் வருகிறது. மக்களவை தேர்தலில் இங்கு அதிமுக கூட்டணி வேட்பாளர் வெறும் 15 ஆயிரத்து 815 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

Tags : DMK ,constituencies ,constituency , The cornerstone,anger of people, their constituency, undesirable ministers, DMK high vote
× RELATED அதிமுகவில் சென்னை மண்டலத்தை சேர்ந்த 15...