×

ரம்ஜான் பண்டிகையை முடிவு செய்ய நிலவின் அடிப்படையில் இணையதள நாட்காட்டி: பாகிஸ்தானில் அறிமுகம்

இஸ்லாமாபாத்: ரம்ஜான் பண்டிகைக்காக பிறை காண்பதில் உள்ள வேறுபாடுகளை களைய, பாகிஸ்தானில் நிலவை அடிப்படையாக கொண்ட இணையதள நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் ரம்ஜான் நோன்பை எப்போது தொடங்கி, எப்போது முடிப்பது என்பது வரை அனைத்துமே நிலவை அடிப்படையாக கொண்டே கணிக்கப்படுகிறது.

அதிலும், உலகின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள இஸ்லாமிய நாடுகளில், சில சமயம் ஒரே நாட்டிலும் கூட, பிறை காண்பதில் ஏற்படும் வேறுபாடுகளால் வெவ்வேறு தினங்களில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இது போன்ற வேறுபாடுகளை களைய, பாகிஸ்தானில் நிலவை அடிப்படையாக கொண்ட இணையதள சந்திர நாட்காட்டி அறிமுகப்படுத்தப்படும் என்று இரு வாரங்களுக்கு முன் அந்நாட்டு மத்திய அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பவாத் சவுத்ரி தெரிவித்தார். இந்நிலையில், பாகிஸ்தானில் இணையதள சந்திர நாட் காட்டி 26ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.

இது குறித்து சவுத்ரி நேற்று கூறுகையில், ‘‘இந்த சந்திர நாட்காட்டியை pakmoonsighting.pk என்ற இணையதள முகவரியில் காணலாம். இதில் ரம்ஜான், முகரம் உள்ளிட்ட பண்டிகை நாட்கள் எப்போது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிற இஸ்லாமிய நாடுகளும் இதன் மூலம் பயனடையக் கூடும். அடுத்த 5 ஆண்டுகளுக்கான நிலவை அடிப்படையாக கொண்ட இஸ்லாமிய குறிப்புகள் இந்த சந்திர நாட்காட்டியில் இடம் பெற்றுள்ளன,’’ என்றார்.

Tags : End Ramzan Festival: Introduction ,Moon ,Pakistan , Ramzan Festivals,Moon's Basic, Internet Calendar, Introduction to Pakistan
× RELATED பக்தனுக்காக அமாவாசையை பௌர்ணமி ஆக்கிய அபிராமி