×

ரயில்களில் நகை பறிப்பை தடுக்க கூடுதல் பாதுகாப்பு: டி.ஐ.ஜி பேட்டி

சேலம்: சேலம் ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே டிஎஸ்பி அலுவலகத்திற்கு தமிழக ரயில்வே போலீஸ் டிஐஜி பாலகிருஷ்ணன் நேற்று வந்தார். அங்குள்ள ஆவணங்களை ஆய்வு செய்தபின், ரயில்களில் நகை பறிப்பு சம்பவங்கள் நடக்காமல் இருக்க கூடுதலாக போலீசார் ரோந்து செல்ல வேண்டும் என்று  அறிவுறுத்தினார்.அப்போது டிஐஜி பாலகிருஷ்ணன் கூறியதாவது: சேலம் அருகே சங்ககிரி மாவேலிபாளையத்தில் ஓடும் ரயில்களில் நடந்த நகை பறிப்பு சம்பவங்களில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  ஈரோடு-சேலம் வழியாக செல்லும் ரயில்களில் அதிகமாக காவலர்கள் ரோந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரயில்வே போலீசாரும், உள்ளூர் போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் இரவு நேரங்களில் ரயில் பெட்டிகளில் ரோந்து செல்லவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Additional ,security, prevent ,jewelery ,TIG
× RELATED பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு வழங்க எதிர்ப்பு