×

ரோட்டில் கட்டுகட்டாக பணத்தை வீசிவிட்டு சென்ற விவகாரம் 1.56 கோடிக்கு ஆதாரம் எங்கே?

* தொழிலதிபரிடம் போலீசார் தீவிர விசாரணை * கொள்ளையனை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு

சென்னை: கோட்டூர்புரத்தில் சாலையில் வீசிய ரூ.1.56 கோடி பணம் யாருடையது; தொழிலதிபர் பணம் என்றால் அதற்கான ஆதாரம் கேட்டு அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை நந்தனம் விரிவாக்கம் 6வது  தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(67). தொழிலதிபரான இவர் அண்ணாசாலையில் உள்ள பிரபல வணிக வளாகத்தின் இயக்குநர்களில் ஒருவராக உள்ளார். இவர் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார்.  தொழில் தொடர்பாக தனது குடும்பத்துடன் ஐதராபாத் ெசன்று விட்டார். வீட்டில் அவரது மகள் அகிலா மட்டும் இருந்தார்.நேற்று முன்தினம் காலை அகிலா தூங்கி ஏழுந்து பார்த்த போது, வீட்டில் வைத்திருந்த ரூ.1.50 கோடிக்கும் அதிகமான பணம் மற்றும் நகைகள் கொள்ளைபோனது பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தொழிலதிபர் மகள் அகிலா சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையே ெசன்னை வந்த தொழிலதிபர் பாலசுப்பிரமணியனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ரியல் எஸ்ேடட் தொழில் மூலம் கிடைத்த ரூ.5 கோடி பணத்தில் ரூ.1.56 கோடி பணம் வீட்டில் வைத்திருந்ததாக  தெரிவித்துள்ளார். பணத்திற்கான ஆவணங்களை போலீசார் கேட்ட போது முதலில் அளிக்க மறுத்துவிட்டதாகவும், பின்னர் பணத்திற்கான ஆவணங்களை போலீசாரிடம் காட்டியதாகவும் தெரிகிறது. ஆனாலும் தொழிலதிபர் மீது போலீசாருக்கு  சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்கிடையே, கோட்டூர்புரத்தில் சாலையில் வீசப்பட்ட பணம் தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட பணமா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை சாலையில் வீசப்பட்ட பணத்திற்கு யாரும் உரிமை  கோரவில்லை. பணம் சைதாப்பேட்டை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொழிலதிபரும் எனது வீட்டில் ரூ.1.50 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார். அதேநேரம், கோட்டூர்புரத்தில் பணத்தை வீசிவிட்டு ெசன்ற பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நபரின் உருவமும், தொழிலதிபர் வீட்டின் தெரு முனையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நபரின் உருவமும் ஒன்றாக  இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே குற்றவாளியை பிடிக்க அடையார் துணை கமிஷனர் உத்தரவுப்படி 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.தொழிலதிபர் வீட்டில் வேலை செய்யும் பெண் ஒருவர் விசாரணையின் போது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், கோட்டூர்புரம் பகுதிகளில் செல்போன் சிக்னல்கள் குறித்தும் சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் குற்றவாளியை தேடி வருகின்றனர். குற்றவாளியை ஓரிரு நாளில் பிடித்துவிடுவோம் என்று தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : road , money ,bundle, money
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி