×

மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அழைப்பு : பாகிஸ்தானுக்கு அழைப்பு இல்லை

டெல்லி : மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அண்டை நாடுகள் அழைக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்படாதது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. 30ம் தேதி மாலை டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற உள்ள பதவியேற்பு விழாவிற்கு வங்காள தேசம், மியான்மர், இலங்கை, பூடான், தாய்லாந்து, நேபாளம் ஆகிய 8 நாடுகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இது தவிர கிர்கிஸ்தான் அதிபர் மற்றும் பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்கப்படாதது விமர்சனத்திற்கு விட்டுள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என குற்றம் சாட்டிவரும் இந்தியா, தீவிரவாத நடவடிக்கைகளை அந்த நாடு கைவிடவில்லை என்று விமர்சித்து வருகிறது. பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டுவதை தவிர்ப்பதற்காக அழைப்பு மறுக்கப்பட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றனர். ஆனால் அதே சமயம் கடந்த 2014ம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்ற போது, அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரிஃப் அழைக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Tags : neighbors ,Modi ,Sri Lanka ,Pakistan ,ceremony , Modi, sworn, ceremony, Pakistan, President
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...