ராஜ் தாக்கரே பிரசாரம் செய்த அனைத்து தொகுதியிலும் காங்கிரஸ் கூட்டணி தோல்வி

மும்பை, மே 24: பாஜ - சிவசேனா கூட்டணிக்கு எதிராக மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே பிரசாரம் செய்த அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மண்ணைக் கவ்வியுள்ளது. மக்களவைத் தேர்தலில் ராஜ் தாக்கரே கட்சி போட்டியிடவில்லை. ஆனால், பாஜ மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த ராஜ் தாக்கரே, பாஜ-சிவசேனா போட்டியிட்ட சில முக்கிய தொகுதிகளில் அந்த கூட்டணிக்கு எதிராக பொதுக்கூட்டங்களை நடத்தி பிரசாரம் செய்தார்.

அவரது இந்த பிரசாரத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இது காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக அமையும் என்று கருதப்பட்டது. குறிப்பாக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட தொகுதிகளில்தான் ராஜ் தாக்கரே பிரசாரம் செய்தார்.

ஆனால், ராஜ் தாக்கரே பிரசாரம் செய்த அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் ராஜ் தாக்கரேயின் பொதுக்கூட்டங்களுக்கு கூடிய கூட்டம், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவான வாக்குகளாக மாறவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது.

Tags : coalition ,Congress ,constituencies ,Raj Thackeray , Raj Thackeray, Propaganda, All Block, Congress Alliance, Failure
× RELATED குறிஞ்சிப்பாடி ஒன்றிய தலைவர் பதவி...