×

கண்ணமங்கலம் பெரிய மசூதி அருகே பழுதான மின்கம்பத்தை சீரமைக்க கோரிக்கை

கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் பெண்பாட சாலையில் உள்ள முஸ்லிம் பள்ளி, பெரிய மசூதி அருகே தனியார் பள்ளிகள் உள்ளது. இந்த தெருவில் உள்ள மின்கம்பத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் சில வாரங்களுக்கு முன்பு மோதியதால் கம்பம் சேதமடைந்து சாய்ந்த நிலையில் உள்ளது. மேலும் கம்பத்தின் அடிப்பாகத்தில் உள்ள கம்பிகள் உடைந்து துருப்பிடித்தும் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்பவர்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, ஆபத்து ஏற்படுவதற்கு முன்பு சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kannamangalam ,mosque , Kannamangalam, large mosque, spacious battery
× RELATED மாணவியிடம் பாலியல் சில்மிஷம் விவசாயி மீது போக்சோ வழக்கு ஆரணி அருகே