×

வாக்கு எண்ணும் மையங்களுக்கு முகவர்கள் பென்சில் எடுத்துச் செல்ல அனுமதி...செல்போனுக்கு தடை: சத்யபிரதா சாஹு

சென்னை: வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு சுற்றுக்கு பின்னும் முடிவுகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 542 தொகுதிகளில் 7 கட்டமாக நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் (மே23) நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 43 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.  இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்கு எண்ணிக்கை தொடர்பாக சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில்,

* வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு துவங்குவதற்கு, ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வாக்குச்சாவடிக்கு முகவர்கள் வரவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

* பூத் ஏஜெண்டுகளுக்கு உணவு, தேர்தல் அதிகாரி மூலம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், அதற்கான கட்டணம் வேட்பாளரிடம் இருந்து வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

* வாக்கு எண்ணிக்கையின் போது ஒரு வேட்பாளருக்கு 16 முகவர்கள் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* ஒரு முறை வாக்கு என்னும் மையத்தை விட்டு முகவர்கள் வெளியேறினால் மீண்டும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

* முகவர்கள் பென்சில் எடுத்துச் செல்லலாம்; ஆனால் மொபைல் போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.

* வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு சுற்றுக்கு பின்னும் முடிவுகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

* குறிப்பாக, மே 23ம் தேதி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மே 23ம் தேதி இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

* வாக்கு எண்ணிக்கையின் போது ஒரு தொகுதிக்கு 5 வாக்குச்சாவடியில் உள்ள ஒப்புகை சீட்டுகள் கடைசியாக எண்ணப்படும்.

* வாக்குபதிவு இயந்திர பழுது காரணமாக வாக்குகள் எண்ண முடியாத நிலை ஏற்பட்டால் அதற்கான விவிபாட் இயந்திரங்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

* ஒரு நாடாளுமன்ற தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதி இருக்குமாயின், அந்த 6 தொகுதிக்கான வாக்குகளும் ஒன்றாக சேர்த்து மொத்தமாக எண்ணப்படும் என்று சத்யபிரதா சாஹு கூறியுள்ளார்.


Tags : Agents ,count centers ,Satyabrata Sahu , Votes, Centers, Satyabrata Sahu, Cellphone Prohibition
× RELATED இலங்கைக்கு படகு மூலம் அனுப்ப முயற்சி:...