×

தேனி ரயில்வே ஸ்டேஷன் விரிவாக்கப்பணி துரிதம்

* பணியாளர்களுக்கு புதிய குடியிருப்பு

தேனி :  தேனி ரயில்வே ஸ்டேஷனை விரிவுபடுத்தி கட்டும் பணிகளும், அதிகாரிகளுக்கு கெஸ்ட் ஹவுஸ்’, பணியாளர்களுக்கு குடியிருப்பு கட்டும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. மதுரை- போடி அகல ரயில்பாதை விரிவாக்க பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகின்றன. இதற்காக போடி, தேனி, ஆண்டிபட்டி ரயில்வே ஸ்டேஷன்கள் விரிவுபடுத்தும் பணிகளும் துரிதமாக நடந்து வருகின்றன.

தேனியில் ரயில்வே அதிகாரிகளுக்கு இரண்டு அறைகளுடன், மீட்டிங் ஹால் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய புதிய ‛கெஸ்ட் ஹவுஸ்’ கட்டும் பணிகள், ஓடைகளின் குறுக்கே ரயில்வே சிறுபாலங்கள் கட்டும் பணிகள் நடக்கின்றன. தேனி மற்றும் ஆண்டிபட்டியில் ரயில்வே பணியாளர்களுக்கு குடியிருப்புகளும் கட்டப்பட்டு வருகின்றன. இது குறித்து ரயில்வே துறையினர் கூறுகையில், `` பணிகளை ரயில்வே நிர்வாகம் பிரித்து, பிரித்து கான்ட்ராக்ட் வழங்கி உள்ளது. ஒரே ஒப்பந்ததாரரிடம் பணிகளை வழங்கவில்லை. இதனால் பணிகள் எல்லா இடங்களிலும் விரைவாக நடந்து வருகின்றன.

alignment=


கெஸ்ட் ஹவுஸ் மட்டும் ரூ.1.25 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது. இதேபோல் எல்லா பணிகளுக்கும் தனித்தனி மதிப்பீடுகள் உள்ளன. இன்னும் 3 மாதத்திற்குள் பணிகளை முடித்து  கொடுக்குமாறு ரயில்வேதுறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆனால், ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான நில அமைப்புகள் உள்ளது. பல பணிகள் அதிக நீர் பிடிப்பு உள்ள வயல்வெளியான பயன்படுத்தப்பட்ட ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் நடக்கின்றன. இது போன்ற காரணங்களால் பணிகளை விரைவாக முடிப்பதில் இடையூறுகள் ஏற்படுகின்றன’’ என்று கூறினர்.

Tags : Theni Railway Station Extension Workshop , Theni,bodi, railway station, broad gauge
× RELATED தேனி ரயில்வே ஸ்டேஷன் விரிவாக்கப்பணி துரிதம்