×

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற விமானத்தில் திடீர் தீ சென்னையில் தரை இறக்கம்: 172 பேர் தப்பினர்

சென்னை:  சிங்கப்பூர்  விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அது, சென்னையில் தரை இறக்கப்பட்டதால் 172 பேர் உயிர் தப்பினர். திருச்சியில் இருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் தனியார் பயணிகள் விமானம் நேற்று அதிகாலை 1.30 மணிக்கு சிங்கப்பூருக்கு புறப்பட்டது. விமானத்தில், 165 பயணிகள், 7 விமான சிப்பந்திகள் பயணம் செய்தனர். அதிகாலை 2.45 மணியளவில், விமானம் சென்னையை கடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென இயந்திரகோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். சிறிதுநேரத்தில் குபுகுபுவென புகை வந்து, தீப்பிடித்தது. உடனே தலைமை விமானி, சென்னையில் உள்ள விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை அவசரமாக தொடர்பு கொண்டு, நிலைமையை விளக்கினார்.  இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் விமானம் தரை இறங்க அனுமதி கிடைத்தது.இந்நிலையில். அதிகாலை 3.30 மணியளவில் விமானம், சென்னையில் பத்திரமாக தரையிறங்கியது. 172 பேரும் கீழே இறக்கப்பட்டனர். தீயணைப்பு படைவீரர்கள், துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.

இதையடுத்து பொறியாளர் குழுவினர், விமானத்துக்குள் ஏறி, இயந்திரக் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதற்கான உதிரிபாகங்கள், சிங்கப்பூரில் இருந்து கொண்டு வர வேண்டி இருந்ததால் உடனடியாக சரி செய்ய முடியவில்லை. சிங்கப்பூரில் இருந்து உதிரி பாகங்கள் கொண்டு வரப்பட்டு சரிெசய்யப்பட்டு, இன்று அதிகாலை விமானம் புறப்பட்டு செல்லும் என்று தெரிகிறது. இதற்கிடையில், பயணிகளில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் இருக்கலாம் என்பதால் சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் மற்றும் சுங்க அதிகாரிகளுக்கு தெரிவித்து விட்டு, அனைத்து பயணிகளும் கீழே இறக்கப்பட்டு, சென்னையில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.


Tags : fire ,airport ,Tiruchirapalli ,Singapore , Trichy, fire, Chennai, ground floor,
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா