×

பஞ்சத்தை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் பட்டப்பகல் கொள்ளை கேடு விளைவிக்கும் தரமற்ற கேன் வாட்டர்

* கொடிகட்டிப்பறக்குது சட்டவிரோத பிசினஸ்

* வழக்கம் போல கண்டுகொள்ளாத அதிகாரிகள்

சென்னை மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதை பயன்படுத்தி வாட்டர் கேன் பிசினஸ் கொடிகட்டிப்பறக்கிறது. எந்த வித அடிப்படை சோதனைகளுக்கும் உட்படுத்தாமல் தரமற்ற தண்ணீரை கேன்களில் நிரப்பி காசு பறிக்கும் கும்பலை தடுக்க யாருமில்லை. அதிகாரிகள் வழக்கம் போல கண்துடைப்பு சோதனைகளை அரங்கேற்றி வருகின்றனர். அப்பாவி மக்களோ, தனி பட்ஜெட்டை போட்டு குடிநீர் வாங்கும்  அவலம் ஒரு பக்கம்; தரமற்ற குடிநீரை பருகி பல்வேறு நோய்களில் சிக்குவது இன்னொரு பக்கம். குடிசைத் தொழிலாக வாட்டர் கேன் வியாபாரம் இப்போது புற்றீசல் போல பரவி விட்டது. பல கோடி வருவாய் தருவதால் உயிரை பறிக்கும் தண்ணிக்கு (அதான் டாஸ்மாக் சாராயம்) ஏகப்பட்ட கட்டுப்பாடு, சோதனைகள். ஆனால், மக்களின் உயிர்த்துளியாக மதிக்கப்படும் குடிநீர் தரமானதா என்ற கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை.


மெட்ரோவாட்டர், மாநகராட்சி, நகராட்சி என்று மட்டுமில்லாமல், சுகாதாரத்துறை உட்பட பல துறைகளின் மூலம் சோதனை செய்தால் தான் இந்த சுகாதாரமற்ற அவலம் தீரும் என்பது அரசுக்கு தெரிந்தால் சரி  என்று தன்னார்வலர்கள் குமுறுகின்றனர். போதாக்குறைக்கு, சென்னையில் மெட்ரோவாட்டர், லாரிகளில் குடிநீர் சப்ளை செய்வதில் ஆன்லைன் முன்பதிவு முறை வந்தும், தில்லுமுல்லுகளுக்கு குறைவில்லை. இடைத்தரகர்களிடம் ெசான்னால் போதும், வீட்டுக்கு தினமும் லாரி தண்ணீர் வந்துவிடும். ஏழைகள் தெருத்தெருவாக குடங்களுடன் வலம் வரும் போது, அந்த தண்ணீரை சிலர் விற்பதும் கொடுமை. இதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதும் வேதனை. இதற்கு முற்றுப்புள்ளி  வருமா? இதோ நான்கு தரப்பில் அலசுகின்றனர்.


Tags : lagoon ,Tamil Nadu , Tamilnadu, robbery, buggy cant waters
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...