346 பேரை பலி கொண்ட 737 மேக்ஸ் விபத்துக்கு சாப்ட்வேர்தான் காரணம்: போயிங் நிறுவனம் ஒப்புதல்

புதுடெல்லி: போயிங் 737 மேக்ஸ் விமான விபத்துக்கு மென்பொருள் கோளாறுதான் காரணம் என, ேபாயிங் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. எத்தியோபிய தலைநகர் அட்டிஸ் அபாபாவில் இருந்து எத்தியோபியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-800 மேக்ஸ் ரக விமானம், கடந்த மார்ச் மாதம் விபத்துக்குள்ளானதில் 4 இந்தியர் உட்பட 157 பேர் இறந்தனர். இதுபோல் இதே ரக இந்தோனேஷிய விமானம் கடந்த அக்டோபரில் விபத்துக்கு உள்ளானதில் 189 பேர் இறந்தனர்.

இந்த இரண்டு விபத்துக்கும் சாப்ட்வேர் பிரச்னைதான் காரணம் என்று கண்டறியப்பட்டது. தவறான சென்சார் தகவல்கள் காரணமாக விபத்து நிகழ்ந்துள்ளது. சென்சார் தேவையில்லாத நேரத்தில் எம்சிஏஎஸ் ஐ ஆன் செய்துள்ளது. விமானத்தை விமானி மேலே ஏற்ற முயற்சித்தபோது, இந்த தானியங்கி சென்சார் விமானத்தை கீழிறக்க முயன்றுள்ளது. இருப்பினும் பைலட்கள் போயிங் தரப்பில் கொடுக்கப்பட்ட அவசர கால நடைமுறைகளை பின்பற்றியும் விபத்தை தடுக்க முடியவில்லை.

இதை தொடர்ந்து இந்த ரக விமானங்களை இயக்க விமான போக்குவரத்து இயக்க சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தடை செய்தது. இந்தியா மட்டுமின்றி ஐரோப்பிய யூனியன் விமான பாதுகாப்பு ஏஜென்சி உட்பட பல நாடுகளிலும் இந்த விமானம் தடை செய்யப்பட்டு விட்டது. இந்த நிலையில், போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கான மென்பொருளை புதுப்பித்து விட்டதாக (சாப்ட்வேர் அப்டேட்) போயிங் நிறுவனம் அறிவித்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த லயன் ஏர்லைன்ஸ் விபத்து மற்றும் கடந்த மார்ச் மாதம் நடந்த எத்தியோபிய விமான விபத்துகளுக்கு சாப்ட்வேர் கோளாறுதான் காரணம் என போயிங் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், சாப்ட்வேரில் கோளாறு இருப்பது முதன்முதலில் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது எனவும், இதுகுறித்து விமான போக்குவரத்து நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதா எனவும் இந்த நிறுவனம் விளக்கம் அளிக்கவில்லை.

Related Stories: