×

நவி மும்பை ஏ.டி.எம்.மில் ரூ.28 லட்சம் துணிகர திருட்டு

நவி மும்பை: நவி மும்பையில் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தில் இருந்து ₹28 லட்சத்தை முகமூடி அணிந்த நபர் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பையின் புறநகர் பகுதியில் உள்ள நவி மும்பையில், தலோஜாவில் உள்ள பஞ்சானந்த் நகரில் ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் ஒன்று உள்ளது. இங்கு கடந்த 10ம் தேதி கருப்பு முகமூடி அணிந்த ஒரு ஆசாமி, ஏ.டி.எம். அறைக்குள் நுழைந்து, இயந்திரத்துக்கு எந்த சேதத்தையும் ஏற்படுத்தாமல் அதைத் திறந்து பணத்தை எடுத்துக் கொண்டு செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

குற்றவாளியிடம் அந்த இயந்திரத்தின் சாவி இருந்திருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். பணம் திருடப்பட்டதை அடுத்து அந்த ஏ.டி.எம். செயல்படாமல் இருந்தது பற்றி வங்கியின் சாப்ட்வேர் மூலம் தகவல் கிடைத்ததை தொடர்ந்து எஸ்.பி.ஐ. அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள ஏரியா மானேஜருக்கு தகவல் கொடுத்தனர். அவர் சென்று ஏ.டி.எம். இயந்திரத்தை சரிபார்த்தபோது அதில் உள்ள பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. அதிகாரிகள் இதுகுறித்து தலோஜா காவல் நிலையத்தில் நேற்று முறைப்படி புகார் கொடுத்தனர். போலீசார் கூறும்போது, “குற்றவாளியிடம் ஏ.டி.எம்.மின் சாவி இருந்துள்ளது. எனவே இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்’’ என்றனர்.

Tags : Navi Mumbai ,ATM , Navi Mumbai, ATM, Venture, theft
× RELATED ஏடிஎம் மையத்துக்கு கொண்டு சென்ற ரூ.37...