×

வாகனத்திற்கு வழி விடுவதில் தகராறு நண்பர்களுக்கு கத்திக்குத்து பாஜ பிரமுகர், மகன் கைது

பல்லாவரம்: பம்மல் நாகல்கேணி பகுதியை சேர்ந்தவர் நந்தா (19), தனியார் கல்லூரி மாணவர். இவரும் நண்பர் விக்னேஷ் (16) என்பவரும் நேற்று முன்தினம் இரவு குரோம்பேட்டையில் நடந்த மாதா கோயில் திருவிழாவிற்கு, பைக்கில் சென்றனர். நாகல்கேணி பிரதான சாலையில் நித்தியானந்தம் என்பவர் வழியை மறித்துக் கொண்டு நின்றிருந்தார். அவரை நந்தாவும், விக்னேஷூம் தட்டிக்கேட்டதோடு, கையை பிடித்து இழுத்து தள்ளிவிட்டு விட்டு சென்றதாக தெரிகிறது.
பின்னர் இருவரும் மீண்டும் அதே சாலை வழியாக வீட்டிற்கு திரும்பினர்.

அப்போது, இருவரையும் நித்தியானந்தமும், அவரது தந்தையும், பம்மல் நகர பாஜ தலைவருமான மதன் (42) என்பவரும் தடுத்து நிறுத்தி இரும்பு கம்பி மற்றும் கத்தியால் தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நந்தாவிற்கு 9 தையல்கள் போடப்பட்டுள்ளது. படுகாயமடைந்த விக்னேஷ் ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்கர் நகர் போலீசார், நித்தியானந்தம் மற்றும் அவரது தந்தை மதன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். 


Tags : Bachchan ,friends ,dispute , way to the vehicle, dispute, screaming, BJP dignitaries, son arrested
× RELATED தேர்தல் பிரசாரத்தின்போது...