×

மறியல் செய்தும் பயனில்லை: இந்திரா காந்தி,திருத்தணி.

திருத்தணி நகரம் 7வது வார்டில் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரு உள்ளது. இந்த தெருவில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் வசித்த தெருவில் கூட திருத்தணி நகராட்சி சார்பில் சீரான குடிநீர் வினியோகம் செய்வதில்லை. இதனால் நாங்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சாலை மறியல் செய்தோம். மேலும், குழாய் பதித்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டி சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் இதுநாள் வரையில் செயல்படுத்தவில்லை. இதேபோலதான் நகரின் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது.

Tags : Prabhakaran ,Indira Gandhi ,Tiruttani , Prabhakaran does not work: Indira Gandhi, Tiruttani.
× RELATED கொரோனாவில் இருந்து குணமடைந்த...