×

பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் வி.சி.க. மனு

சென்னை: பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் எனக்கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. அப்போது அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்தில் உள்ள பொன்பரப்பி கிராமத்தில் தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் பகுதியில் ஒரு கும்பல் நுழைந்து தாக்குதல் நடத்தியது. இதில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. தேர்தல் நாளில் நடந்த இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்நிலையில் பொன்பரப்பி பகுதியை சேர்ந்த விஷ்ணுராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தனது வாக்குச்சாவடியில் நடந்த வன்முறை காரணமாக தன்னால் வாக்களிக்க முடியவில்லை. எனவே அந்த பகுதியில் மீண்டும் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கேட்டிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இதுதொடர்பான ஆவணங்களுடன் தலைமை தேர்தல் அதிகாரியை அணுகும்படியும், அவர் மறுதேர்தல் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை நேற்று சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில், பொன்பரப்பியில் உள்ள வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : VCC for Election Commission Petition , Goldfish, rehabilitation, election commission, vCC Petition
× RELATED புறநகர் ரயில், மாநகர பேருந்து, மெட்ரோ...