×

அறுதி பெரும்பான்மையுடன் தொடர்ந்து 2வது முறையாக பாஜக ஆட்சிக்கு வரும் : பிரதமர் மோடி நம்பிக்கை

டெல்லி : பண்டிகை மற்றும் கிரிக்கெட் போல தேர்தலும் திருவிழாவை போல நடக்கிறது என்று பிரதமர் மோடி செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். ஐந்து வருடங்கள் ஆட்சி நடத்தி மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று நாங்கள் ஆட்சி அமைப்போம் என நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்றும்  பாஜகவிற்கு இந்த வருட மக்களவைத் தேர்தலில் நாட்டை ஆள்வதற்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கிறது  என்றும் பிரதமராக முதல்முறை செய்தியாளர்களை சந்தித்த நரேந்திர மோடி கூறினார். மக்கள் ஏகோபித்த ஆதரவு இருப்பது மகிழ்ச்சியை தருகிறது என்றும் இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவோம் என்றும் மோடி கூறினார்.



Tags : Modi , PM Modi, trust, BJP rule
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...