×

தொழிற்பழகுநர் தேர்வுக்கு விண்ணப்பிக்க 20ம் தேதி கடைசி நாள்

சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரம் வெளியிட்ட அறிவிப்பு:
தனி நபராக அகில இந்திய தொழிற்பழகுநர் தொழிற்தேர்வில் கலந்துகொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தனி நபராக தேர்வு எழுதுவதற்கு கல்வி தகுதியாக ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்று தொழிற் சான்றிதழ் பெற்றவர்கள், தொழிற்பழகுநர் பயிற்சி வழங்கும் பட்டியலில் இடம்பெற்ற தொழில் நிறுவனங்களில் நேரடி பணியாளர்களாக குறைந்தபட்ச அனுபவம் பெற்றவர்கள்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் வருகிற 20ம் தேதி ஆகும். தேர்வு கட்டணம் ரூ.200. அகில இந்திய தொழிற்பழகுநர் தேர்வில் தனி நபராக கலந்து காள்ள விருப்பமுள்ளவர்கள் உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், சென்னை மாவட்டம் (வடசென்னை அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகம்) சென்னை-21 அலுவலகத்தை தொடர்பு கொண்டு பிற விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

Tags : applicant , Employer Selection, Apply, 20th, Last Day
× RELATED மின்இணைப்பு விண்ணப்பம் ரத்து...