×

சுகாதாரத்துறையின் தவறால் இறந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு: முத்தரசன் பேட்டி

சென்னை: மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையால் இறந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க  வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மே 7ம் தேதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 5 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறையில் உள்ள முறைகேடுகள், களையப்படாத பிரச்னைகளை கண்டித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம், அனைத்திந்திய மாணவர் பெரு மன்றம், அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 50 பேர் சென்னையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்திற்கு பின் அவர் கூறியதாவது:
ஏழைகள் அரசு மருத்துவமனைகளை நம்பியே உள்ளனர். அப்படி இருக்கையில் அனைத்து அரசு மருத்துவமனைகளும் சிறப்பாக செயல்பட வேண்டும். மே 7ம் தேதி மதுரையில் கனமழை பெய்துள்ளது. மின்சாரம் தடைபடும் போது இயங்க வேண்டிய ஜெனரேட்டர், அன்று இயங்க வில்லை.

அவர்கள் உடல் நலக்குறைவால் இறந்தார்கள் என்று மருத்துவமனை நிர்வாகம் பொய் சொல்கிறது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மின்சாரம் தடைபட்டதால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். இது ஒரு அடையாள கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மட்டுமே. உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்த கட்டமாக மாவட்ட தலைநகரங்கள், தாலுகா அளவில் போராட்டம் தொடரும்.


Tags : deaths ,family members ,Muthrasan , Health, misappropriation, death, family per capita, Rs.1 crore, compensation, mudrasan
× RELATED 10 ஆண்டுகளில் 4.25 லட்சம் பேர் தற்கொலை:...